×

கூடலூர் அருகே தென்னையை நாசப்படுத்தியது கிணற்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய விநாயகன் காட்டுயானை

கூடலூர் :  கூடலூர் அருகே உள்ள தேவர் சேலை அருகே உள்ள மச்சிக்கொல்லி பகுதியில் இரவில் புகுந்த விநாயகர் காட்டுயானை இங்குள்ள கிணற்று சுற்றுச்சுவரை இடித்து நாசப்படுத்தியது.கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் விளைவித்து வந்த காட்டு யானை விநாயகனை கடந்த சில வருடங்களுக்கு முன் வனத்துறையினர் பிடித்து வந்து முதுமலை வனப்பகுதியில் விட்டனர். இந்த யானை முதுமலை வனப்பகுதியை ஒட்டிய ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்த துவங்கியது. நூற்றுக்கும் அதிகமான தென்னை மரங்களை இந்த யானை சேதப்படுத்தியதால் இந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தொரப்பள்ளி முதல் போஸ்பரா வரையிலான அகழிகளை ஆழப்படுத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் யானை  ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த யானை தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி, ஒற்று வயல், மட்டம், செம்ப கொல்லி, மானி மூலை, குரும்ப கொல்லி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.இங்குள்ள செட்டியங்காடி பகுதியில் வசிக்கும் போஸ் என்பவரது தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த விநாயகன் காட்டுயானை தென்னை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது. பின்னர் அங்கிருந்த  கிணற்றின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்தியது. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் விநாயகன் காட்டுயானை வருவதை தடுக்க வன எல்லையில் அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கூடலூர் அருகே தென்னையை நாசப்படுத்தியது கிணற்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய விநாயகன் காட்டுயானை appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Machikolli ,Dewar Salei ,Dinakaran ,
× RELATED கூடலூர்,பந்தலூர் வழியாக வரும்...